மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை! சி.வி. விக்னேஸ்வரன்

#SriLanka #Election #C V Vigneswaran #Local council
Mayoorikka
2 years ago
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை! சி.வி. விக்னேஸ்வரன்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் எந்தவொரு எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை என்பதனை 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மாகாணங்களின் அதிகாரங்களை பறித்தது இன்னும் மத்தியில் குவிக்கும் திட்டமும் வெளிப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

 வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்பதனை அழிக்கும் திட்டம் இந்த வரவு செலவுத்திட்ட உரையில் பிரதிபலித்தது. மாகாணங்களின் அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் திட்டங்களும் மாகாணங்கள் ஒரு போதும் தங்களுக்காக சிந்திக்க அனுமதிக்கப்படக்கூடாது என்ற இனத்துவ சிந்தனைகளும் இதில் வெளிப்பட்டுள்ளன.

 இலங்கையை ஆட்சி செய்யும் இனத்துவ அரசுகள் இனப்படுகொலைகளைத்தான் நிகழ்த்தி வருகின்றன. நான் வடக்கின் முதலமைச்சராக இருந்த போது தமிழினப்படுகொலை தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினேன்.

அதன்பின்னர்தான் மாகாண சபைகளை வைத்திருப்பதில்லையென்ற தீர்மானத்தை ஆட்சியாளர்கள் எடுத்தனர்.

 யுத்தம் முடிந்து 14 வருடங்களாகின்ற போதும் வடக்கில் இராணுவ இருப்பு குறைக்கப்படவில்லை 2 இலட்சம் இராணுவத்தினர் இன்றும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

அரச முகவர்களைப் பயன்படுத்தி பல்வேறு ஆக்கிரமிப்பு , அபகரிப்பு , குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எமது நினைவு கூரல்கள் கூட நசுக்கப்படுகின்றன என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!