ராஜபக்‌ஷக்களின் குடியுரிமை தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Mahinda Rajapaksa #Gotabaya Rajapaksa #Sri Lanka President #Basil Rajapaksa
Mayoorikka
2 years ago
ராஜபக்‌ஷக்களின்  குடியுரிமை தொடர்பில்  வெளியான தகவல்!

நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்‌ஷ சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே ராஜபக்‌ஷக்களின் குடியுரிமை தொடர்பில் பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானம் மற்றும் நிலைப்பாடு என்னவென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

 பாராளுமன்றத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

 நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டையும் மக்களையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் யார்? என்பதை உயர்நீதிமன்றம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளது. 

images/content-image/2023/11/1700093262.jpg

எனவே உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் உட்பட மனுதாரர்களுக்கு நாட்டு மக்கள் சார்பில் கௌரவத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தினால் முத்திரை குத்தப்பட்டுள்ள ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக்கு வரும் போது நாட்டில் 30 இலட்சம் பேர் வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் அவர்களின் வறுமையில் வாழ்வோரின் எண்ணிக்கை 70 இலட்சமாக உயர்வடைந்தது. நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் ,வரிசை யுகம் ஏற்பட்டது. மக்கள் போராட்டங்கள் வெடித்தன. 

ஆட்சி மாறியது. இவ்வாறான நிலையில்தான் பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்‌ஷ சகோதரர்கள் உட்பட அரச உயர் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

ஆகவே இவர்களின் குடியுரிமை தொடர்பில் பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானம் மற்றும் நிலைப்பாடு என்ன? என்றும் வினவினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!