கஹதுடுவ பகுதியில் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான வேன் : 06 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
#SriLanka
#Accident
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கஹதுடுவ பொல்கசோவிட்ட சந்தியில் பஸ் ஒன்றும் சொகுசு வான் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவி உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தேகொடையிலிருந்து வந்த வேன், கொழும்பு நோக்கித் திரும்புவதற்குத் தயாரான போது கெஸ்பேவயிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று கஹதுடுவ பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் வேனின் சாரதி மற்றும் பயணி ஒருவரும், பாடசாலை மாணவி ஒருவரும், பேருந்தில் பயணித்த மூன்று பெண்களும் காயமடைந்துள்ளனர்.
.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.