புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய உயர் நீதிமன்றின் தீர்ப்பு!

#UnitedKingdom #Refugee
PriyaRam
1 year ago
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய உயர் நீதிமன்றின் தீர்ப்பு!

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என அறிவித்தே நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு வருபவர்கள், கிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும் என்ற திட்டம் முதன்முதலில் 2022 ஏப்ரல் மாதம் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனால் முன்வைக்கப்பட்டது.

இந்த திட்டமானது மனிதாபிமானமற்றது என அகதிகளுக்கான தொண்டு நிறுவங்களும் இது மனித உரிமை சட்டங்களை மீறுவதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டிருந்தன.

images/content-image/2023/11/1700046754.jpg

இந்நிலையில் ருவாண்டாவில் இருந்து வந்த அகதிகளை அவர்கள் தப்பி வந்த அதே நாட்டிற்கு திருப்பி அனுப்புவது மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாக அமையும் என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

குறிப்பாக புகலிடம் கோரும் ஒரு நபரை அவரது பூர்வீக நாட்டிற்குத் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அவ்வாறு செய்வது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

ஆகவே ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்பட்ட மக்கள் அந்நாட்டு அரசாங்கத்தால் பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்பப்படலாம் என்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!