சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி - பிரதேசவாசிகளின் தாக்குதலுக்குள்ளான அதிபர்!

#SriLanka #Colombo #Death #School #Student #Attack #Principal
PriyaRam
2 years ago
சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி - பிரதேசவாசிகளின் தாக்குதலுக்குள்ளான அதிபர்!

கொழும்பில் 6 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகளால் தாக்குதலுக்கு உள்ளான குறித்த பாடசாலையின் அதிபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலையில் கொங்கிறீட் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெல்லம்பிட்டியவில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

images/content-image/2023/11/1700045705.jpg

வெல்லம்பிட்டியவில் பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து மாணவர்கள் மீது விழுந்ததில் 06 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

ஐந்து மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு பலத்த காயங்கள் ஏற்படவில்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!