கால்நடைகளை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை சிப்பாய் உட்பட மூவர் கைது
#SriLanka
#Arrest
#Robbery
#Soldiers
#Puththalam
#Cattle
#Navy
Prasu
2 years ago
புத்தளம் முந்தல் பிரதேசத்தில் வீடுகளில் உள்ள கால்நடைகளை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை சிப்பாய் உட்பட மூவர் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் புத்தளம் - பட்டுலு ஓயா பிரதேசத்தை சேர்ந்த யாழ்ப்பாண கடற்படை முகாமில் பணிபுரியும் கடற்படை சிப்பாயாவார்.
சந்தேகநபர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட இரண்டு கால்நடைகளுடன் அவை ஏற்றிச்செல்லப்பட்ட லொறி ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.