இஸ்ரேல் காசா யுத்தம் - உலகத்தலைவர்களுக்கு கனேடிய பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை
#Canada
#world_news
#Israel
#War
#Gaza
PriyaRam
1 year ago

இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் போராளிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் குறித்த தாக்குதலை நிறுத்துவது குறித்து அனைத்து தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உலகத்தின் அமைதிக்காக அனைவரும் ஒண்றினைய வேண்டும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



