யேமன் அருகே கவிழ்ந்த பயணிகள் படகு - பலர் மாயம்!
#Accident
#world_news
#Boat
#Yemen
PriyaRam
2 years ago
யேமன் அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த படகு 75 பேருடன் சென்றுகொண்டிருந்த போது வேகமாக வீசிய காற்றில் நிலைகுலைந்து அதிலிருந்தவர்கள் கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 49 பேரும் காணாமல் போயுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.