வவுனியாவில் கை, கால்கள் இன்றி மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் : பொலிஸார் தீவிர விசாரணை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வவுனியாவில் கை, கால்கள் இன்றி மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் : பொலிஸார் தீவிர விசாரணை!

வவுனியா, தரணிக்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள குறிசுட்டகுளம் ஏரியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், 20-25 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

அவர் சில நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என  நம்பப்படுகிறது, மேலும் அவரது தலைமுடி மிகவும் நீளமாக வளர்ந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். முகம் அடையாளம் தெரியாத வகையில் சிவப்பு நிற ஆடை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். 

இதன்போது குறித்த பெண்ணின் சடலம் கை, கால்கள் இன்றி காணப்பட்டுள்ளது. சடலம் அழுகியதன் காரணமாக கை, கால்கள் இன்றி காணப்படுகிறதா, அல்லது துண்டிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பொலிஸார் சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த மரணம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!