2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கலாம் : ரணில் விக்கிரமசிங்க!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கலாம் : ரணில் விக்கிரமசிங்க!

2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அறிவிக்கும் கூட்டம் நேற்று (14.11)  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்படி கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  2024ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமாக இருக்கலாம் என்றும்,  அது படிப்படியாக மேம்படும் என்றும் கூறினார். 

இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை நேர்மறையாக எடுத்துக் கொள்ளலாம். 2018 மொத்த உள்நாட்டு உற்பத்தி 94.5 அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், 2022 மொத்த உள்நாட்டு உற்பத்தி 77 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 85 அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவித்த அவர், நாம் இன்னும் 2018 இன் நிலையை எட்டவிலை எனத் தெரிவித்த அவர், அடுத்த ஆண்டும் அந்த நிலையை நாம் எட்டமாட்டோம் எனவும், 2025 இருந்து நாம் பயணத்தை தொடங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!