அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன், கலந்துரையாடல் நடத்தப்பட்டு எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவும் 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை என்ன என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகிறோம்.
அரசாங்கம் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கும் வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களுக்கும் பாரிய இடையில் உள்ளது. அந்த இடைவெளி குறித்து அதிகாரிகளிடம் இருந்தும் சரியான விளக்கம் இல்லை. நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டது மருத்துவர்களுக்கு பொருளாதார நீதி வழங்க வேண்டும் என்பதையே.
அந்த நோக்கத்திற்குத் தேவையான தீர்வு வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டவில்லை. அடுத்த சில நாட்களில் இது தொடர்பாக அதிகாரிகளிடம் இருந்து விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அதிகாரிகளின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
அரசாங்கத்தின் பதிலைப் பரிசீலித்த பின்னர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.” என்றார்.