இங்கிலாந்து பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்ட விராட் கோலி கையெழுத்திட்ட பேட்
#India
#PrimeMinister
#UnitedKingdom
#Cricket
#Player
#RishiSunak
#DIwali
Prasu
1 year ago

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்தப்பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அவரது மனைவி கியாகோ உடன் கலந்து கொண்டார்.
இந்த விருந்து நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை வழங்கினார்.



