நந்திக்கடலில் கனமழையினால் நிகழ்ந்த மாற்றம்!
#SriLanka
#Fish
#Rain
#Mullaitivu
#Mullivaikkal
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்று அதிகளவிலான மீன்கள் மீனவர்களால் பிடிக்கபட்டு வருகின்றது.
நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்கால் பகுதியிலே கனமழை காரணமாக அதிகமாக மீன்கள் பிடிபட்டு வருகின்றது.

இவ்வாறு பிடிபடும் உயிர் மீன்களான கெழுத்தி, மணலை, சிலாப்பி இன வகையை சார்ந்த மீன்களே ஆகும்.

இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களை பொதுமக்கள் பார்வையிடுவதோடு வலைவீசியும் பிடித்து வருகிறார்கள்.

