நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே முதல் கடமை : ரணில் உறுதி!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே முதல் கடமை : ரணில் உறுதி!

இலங்கையில் கிரிக்கட் மீண்டும் வெற்றிபெற வேண்டுமென விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடிந்தால், கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

 ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14.11) இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  2025ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான செயற்பாட்டின் அடிப்படை அடித்தளமாக இந்த வரவு செலவுத் திட்டத்தை அழைக்க முடியும்.

இவ்வருட வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தையும் அரசியலையும் மாற்றும் வரவு செலவுத் திட்டமாகும். நாட்டின் உடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே தமது இலக்கு. அந்த இலக்கை தாம் ஏற்கனவே அடைந்து வருகிறோம். 

அரசியலின்றி அந்த இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றுவதே தமது நோக்கமாகும். அரசியல் கட்சிகள் தேர்தலை இலக்காகக் கொண்டாலும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பதே தனது முதல் கடமை. அதன் பின்னரே ஏனைய விடயங்களில் கவனம் செலுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!