இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை கடுமையாக விமர்சித்துள்ள நாடின் டோரிஸ்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#RishiSunak
Dhushanthini K
1 year ago

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், "விரைவாக கோபப்படுபவர்" என்றும், "எப்பொழுதும் உண்மையான புன்னகையுடன் இருப்பதில்லை" என்றும், முன்னாள் அமைச்சரவை அமைச்சர் நாடின் டோரிஸ் விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உறுதியான கூட்டாளியான நாடின் டோரிஸ் கடந்த ஆண்டு கட்சி மற்றும் அரசாங்கத்தின் தலைவராக ரிஷி சுனக் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து அவரை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் ஊடகவியலாளர் ரிஷி சுனக்கை தனது புதிய புத்தகமான தி ப்ளாட்டில் "சிகிலி நைஸ்" என்று ஏன் விவரித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியபோது மேற்படி விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த டோரிஸ், நீங்கள் அவரைப் பார்த்தீர்கள் என்றால், நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் எனக் கூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.



