பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வேலை செய்ய அனுமதி!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #Asylum_Seekers
Dhushanthini K
1 year ago
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வேலை செய்ய அனுமதி!

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில், ஹோட்டல்களில் வசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, அவர்கள் நீண்ட காலம் காத்திருந்ததன் காரணமாக, புகலிடக் கோரிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்பே பணி அனுமதி வழங்கப்படுவதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் தஞ்சம் கோருவதற்கான ஆரம்ப முடிவுக்காக ஏறக்குறைய 100,000 பேர் ஒரு வருடத்திற்கும் மேலாகக் காத்திருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.

இதற்கிடையே புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வாரத்திற்கு 9 பவுண்டுகள் வெறுமனே வாழ்வதற்குப் போதாது என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!