இலங்கை கிரிக்கெட் விசாரணையிலிருந்து விலகினார் தலைமை நீதியரசர்!
இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று இலங்கை கிரிக்கெட் தொடர்பானவிசாரணையிலிருந்து விலகியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இருந்தே இவர் விலகியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு அழைக்கப்பட்ட போதே, அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியாயமற்ற விமர்சனங்கள் காரணமாக இந்த விசாரணையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன அறிவித்துள்ளார்.
அதன்படி, இந்த மனு தொடர்பான விசாரணையை வேறு நீதியரசர்கள் ஆயத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.