கல்லறைகளாக மாறிவரும் காசாவின் பிரதான வைத்தியசாலை!

#Israel #War #Gaza
PriyaRam
1 year ago
கல்லறைகளாக மாறிவரும் காசாவின் பிரதான வைத்தியசாலை!

காசாவின் பிரதான வைத்தியசாலையான அல் - ஷிஃபா வைத்தியசாலை தற்போது கல்லறையாக மாறி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.

தொடர் யுத்தம் காரணமாக வைத்தியசாலையில் சடலங்கள் குவிந்து கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைமாத குழந்தைகள் மற்றும் 45 சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

images/content-image/2023/11/1699956928.jpg

அத்துடன், இதுவரை மூன்று குறைமாத குழந்தைகள் உட்பட பிராணவாயு பற்றாக்குறையால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவில் கடந்த சில நாட்களாக நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!