யாழ்ப்பாணம் வந்த விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது!

#India #SriLanka #Jaffna #Airport #weather #Chennai
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் வந்த விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது!

யாழ்ப்பாணம் வந்த விமானம், மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது.

 சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கி திங்கட்கிழமை ( 13) புறப்பட்ட பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

images/content-image/2023/11/1699944574.jpg

 இந்த விமானம் இன்று (14) காலை மீண்டும் யாழ்ப்பாணம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விமானத்தில் மொத்தமாக 24 பயணிகள் பயணித்த நிலையில் அவர்களுக்கான மாற்றுப் பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!