நாட்டை வந்தடைந்த உலக வங்கி பிரதிநிதிகள்!
#SriLanka
#Colombo
#World Bank
#Health Department
PriyaRam
2 years ago
உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
எதிர்வரும் 5 வருடங்களில் இலங்கையில் சுகாதார துறைக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கண்டறியும் வகையில் குறித்த குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, குறித்த குழுவினர் கொழும்பு - மாளிகாவத்தை சுகாதார பிரிவில் கண்காணிப்பு பணிகளில் இணைந்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நெரிசல் நிறைந்த நகர்ப்புற சூழலில் சுகாதார சேவைகளை வழங்குவதில் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதாகவும் இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நாட்டை வந்தடைந்துள்ள குறித்த குழுவில் சுகாதார நிபுணர்களுக்கு மேலதிகமாக பொருளாதார நிபுணர்களும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.