நாட்டைப் பிணைக்கும் சங்கிலிகள் உடைக்கப்பட வேண்டும் - ஹர்ஷ டி சில்வா கருத்து!
#SriLanka
#Parliament
#Samagi Jana Balawegaya
#Harsha de Silva
#budget
PriyaRam
2 years ago
ஜனாதிபதி இந்த வரவு செலவுத் திட்டத்தை மிகவும் கடினமான நிலையில் இருந்து சமர்ப்பித்துள்ளார் எனவே பாசாங்குத்தனமாக இருக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு கடுமையான மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். நாட்டைப் பிணைக்கும் சங்கிலிகள் உடைக்கப்பட வேண்டும்.
இந்த வரவு செலவுத்திட்ட உரையில் இருந்து அடுத்த ஆண்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதை உறுதியாக அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.