வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!
#SriLanka
#Sri Lanka President
#Parliament
#Minister
#Finance
#budget
Mayoorikka
2 years ago
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (14) ஆரம்பமாகவுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை 7 நாள்களுக்கு நடைபெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு நடக்கும்.
மேலும், வரவு - செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் 22 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெற்று மாலை 06.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.