மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை நாடு சந்திக்குமா? நிதி அமைச்சர் கருத்து!

#SriLanka #Parliament #budget #Ranjith Siambalapitiya
PriyaRam
2 years ago
மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை நாடு சந்திக்குமா? நிதி அமைச்சர் கருத்து!

இலங்கையில் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இலங்கையை நீண்ட கால அடிப்படையில் முன்னோக்கி கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டது என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் குறுகிய காலத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/11/1699934708.jpg

நீண்ட கால ஸ்திரத்தன்மைக்காகவே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற போது விடுத்த பிரகடனத்தின் அடிப்படையில் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கும், வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!