அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்! மின்சார சபை

#SriLanka #Sri Lanka President #Electricity Bill #Power
Mayoorikka
2 years ago
அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்!  மின்சார சபை

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 இந்நிலை தொடரும் பட்சத்தில் இந்த நிவாரணத்தை வழங்க முடியும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரான மின்சார பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவிக்கின்றார்.

 தற்போது தேசிய மின்சார உற்பத்தியில் 52 வீதம் நீரால் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் கூறினார். மின் உற்பத்தி நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!