மக்களை ஏமாற்றும் மற்றுமோர் முயற்சியே இந்த வரவு செலவு திட்டம் - சஜித் கடும் விமர்சனம்!

#SriLanka #Sajith Premadasa #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மக்களை ஏமாற்றும் மற்றுமோர் முயற்சியே இந்த வரவு செலவு திட்டம் - சஜித் கடும் விமர்சனம்!

பௌத்த மதத்தின் அடிப்படையில் வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்துள்ளதோடு, உடன்படிக்கையின் வருமான இலக்குகளை எட்ட முடியாமல் இரண்டாவது தவணையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில்  ஜனாதிபதி சில்லறை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். 

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று (13.11) சபையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வரவு செலவு திட்டத்தில் புதிதாக ஒன்றும் இல்லை என ஆளும், எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில் வரவு செலவு திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச மேற்படி தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  ஆட்சியாளர்களை தெய்வீக உலகிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டம் உண்மையில் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு முயற்சியாகும் எனத் தெரிவித்துள்ளார். 

இந்த வரவு செலவுத் திட்டத்தில் காட்டப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் பற்றி பேசுவதற்கு முன்னர், 2022 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுக்கான வரவுசெலவுத் திட்டம் எவ்வளவு பூர்த்தி செய்துள்ளது என்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

வரவு செலவுத் திட்ட உரையின் சில அம்சங்கள் குறித்த தரவுகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு வழங்கியதன் மூலம் பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்திற்கு கூட சவால் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது மக்களை ஏமாற்றும் ஊடக நிகழ்ச்சி எனவும் தெரிவித்தார். 

Lirneasia வின்  மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வறுமையானது 70 இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும், விஞ்ஞானமற்ற வேலைத்திட்டத்தினால் அஸ்வெசும திட்டத்தினால் சரியான பலனை அடைய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!