கண்டியில் விசேட தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க திட்டம் : ஜனாதிபதி அறிவிப்பு!
இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் கண்டியில் விசேட தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் அரச பல்கலைக்கழகங்களை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் இதன்போது விளக்கமளித்துள்ளார்.
அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சக்திவாய்ந்த சட்டங்களை இயற்றியதன் பின்னர் உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் இலங்கையில் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதிக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்படும் எனவும், தற்போதைய வட்டியில்லா கல்விக்கடன் திட்டம் மட்டுமின்றி வணிக வங்கிகள் மூலம் சலுகைக் கடன் வழங்கும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.