முன்பள்ளி ஆசிரியையிடம் கப்பம் கோரிய கிராம அதிகரிக்கு விளக்கமறியல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிராம அதிகாரி எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகத் தலைவர் எனக் கூறி ஹோமாகம, சுவபுதுகம பிரதேசத்தில் வசிக்கும் முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய குற்றச்சாட்டின்பேரில், மிரிஹான விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் சுமார் இரண்டு மாதங்களாக ஆசிரியைக்கு அவ்வப்போது போன் செய்து பணம் கேட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.