இம்யூனோகுளோபுலின் வழக்கின் சூத்திரதாரியை விரைவில் கைது செய்யுமாறு கோரிக்கை!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இம்யூனோகுளோபுலின் வழக்கின் மூளையாக செயல்பட்டவர்களைக் கைது செய்வதில் காவல்துறை மேலும் காலதாமதம் செய்வதாக சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு கூறுகிறது.
இது தொடர்பான குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அதன் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
காலி பிரதேசத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே சமல் சஞ்சீவ இவ்வாறுக்குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு விசுவாசமான ஊழல் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் சுகாதார அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் டொக்டர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.