உங்கள் வாழ்க்கை தீப ஒளியாய் என்றும் பிரகாசிக்க.. லங்கா4 ஊடக குழுமத்தின் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

#SriLanka #Festival #Lifestyle
Mayoorikka
2 years ago
உங்கள் வாழ்க்கை தீப ஒளியாய் என்றும் பிரகாசிக்க.. லங்கா4 ஊடக குழுமத்தின் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் தீபாவளிப்பண்டிகை வருகிறது. தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள்.

 தீபாவளி என்பது இனிப்புகளை சாப்பிடுவது, புதிய பாரம்பரிய உடையில் தயாராவது, அன்பானவர்களை வாழ்த்துவது போன்றது, இந்த புனித நாளில் வழிபடப்படும் செல்வம் மற்றும் செழுமையின் தேவியை வரவேற்க வீடுகளை அலங்கரிப்பதும் ஆகும்.

 நாம் இன்றைய பரபரப்பான சூழலில் எவ்வளவு வேலைப்பளுவாக இருந்தாலும், நமது அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை வாழ்த்துவதைத் தவறவிடக்கூடாது.

 நரகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்று மக்களுக்கு விடுதலையும், மகிழ்ச்சியும் அளித்தார், மகாவிஷ்ணுவாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான். அவனைத் தான் கொல்லாமல், தன் மனைவி சத்தியபாமாவின் கைகளால் அவன் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, போர்க்களத்தில் மயங்கித் தேரில் சரிந்து வீழ்ந்து மாயம் புரிகிறார், கண்ணன் ( கிருஷ்ணன் ). தன் தாயைத்தவிரத் தனக்கு வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான், நரகாசுரன். 

எந்தத் தாயாவது தன் மகனைக் கொல்லுவாளா? ஆனால், சத்தியபாமாவுக்கோ, நரகாசுரன் தன் மகன் என்று தெரியாது. தெரியாதபடி மாயம் செய்து மயங்கியவர் கிருஷ்ணன்.

 ஆகவே, கணவனைக் காக்க, தேரோட்டியாகப் போர்க்களத்துக்குச் சென்றிருந்த சத்தியபாமா, தன் வில்லை எடுத்து வளைத்தாள். அடங்காத கோபத்துடன், நரகாசுரனைக் கொன்று வீழ்த்தினாள். உயிர் பிரியும்போது ஞானம் பெற்ற அந்த அரக்கன், ஒரு வரம் கேட்டான். ” என் மரண தினத்தை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்.என் கொடிய செயல்களால் இருண்டு கிடந்த இல்லங்களில் ஒளி விளங்க வேண்டும்.

 மக்கள் நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு மகிழ்ச்சியாக இப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டான்.

images/content-image/2023/11/1699755969.jpg

 நரகாசுரன் கொல்லப்பட்ட அத் தினத்தையே தீபாவளிப்பண்டிகையாகக் கொண்டாடுவதாகப் புராணங்கள் விளக்குகின்றன. அதனால், இத்தினத்தை, நரக சதுர்த்தி என்றும் அழைப்பார்கள்.

 கிருபானந்த வாரியார், ” பார்வதி தேவியர் கேதார கெளரி விரதம் இருந்து, சிவபெருமானின் இடப்பக்கத்தில் இடம்பெற்ற திருநாளே தீப விழாவாகக் கொண்டாடப்படுகிறது ” என்றுரைக்கிறார்.

 தீபாவளித் திருநாளில், திருக்கயிலாயத்தில், சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு ஆடியதாக ஒரு புராணக் குறிப்பு உண்டு. இதை நினைவூட்டும் விதத்தில் குஜராத்தில் தீபாவளி தினத்தில் இந்து மக்கள் சொக்கட்டான் விளையாட்டு ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 இல்லத்தில் , சுத்தமான , சுவையான சிற்றுண்டிகள் செய்து, கடவுள் படங்களின்முன் படைக்க வேண்டும். இல்லம் முழுவதும் தீபங்கள் ஏற்றி வைத்தல் மிகவும் சிறப்பு. 

இதன்பின்னர், முறையாக ஸ்ரீ விஷ்ணு பகவானையும், ஸ்ரீ லக்ஷ்மி தேவியையும் வழிபட வேண்டும். பூஜைக்குப்பின்னர், சிற்றுண்டிகளைக் குடும்பத்தில் உள்ள அனைவரும் உண்டு, அயலில் உள்ள மக்களுக்கும் கொடுத்து எல்லாரும் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாட வேண்டும்.

 பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் ( மூட எண்ணம் ) ஆகிய தீய சக்திகளை, இறைவனுடைய திருநாமங்களின் மகிமையால் தூள்தூளாக்க வேண்டும் என்பதற்காகவே, தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறோம்.

 இந்த இனிய நாளில், நாமும், நம் உள்ளமென்னும் அகல் விளக்கில் அன்பென்னும் திரியேற்றி, கருணை என்னும் நெய் ஊற்றிப் பக்திச் சுடர் ஒளிக்கச் செய்து உலகை அமைதியே ஆட்சி செய்ய உறுதி கொள்ள வேண்டும்.

 அப்போது, இந்தத் தீபாவளித் திருநாள் மட்டுமல்ல, நாம் வாழுகின்ற ஒவ்வொரு நாளும் நமக்குத் தித்திக்கும் தீபாவளிதான்.

 என்றென்றும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க உலகத் தமிழர்கள் அனைவருக்கும் லங்கா4 ஊடக குழுமத்தின் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!