போப் பிரான்சிசை சந்தித்த இலங்கை ஆயர் பேரவையினர்
#SriLanka
#Meeting
#Pop Francis
#sri lanka tamil news
#Bishops
#Rome
Prasu
2 years ago
இலங்கை ஆயர் பேரவையினர் திருத்தந்தை பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாண்டுக்கு ஒருமுறை உரோமை சென்று திருத்தந்தையை சந்திப்பது வழக்கமாக மாகும்.
இதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இம் முக்கியத்துவம் வாய்ந்த திருப் பயணத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்கு ஆயர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
இதன் போது இலங்கை கிறிஸ்தவ திருச்சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால விவகாரங்கள் குறித்து பாப்பரசருக்கு தெரிவிக்கப்பட்டதுடன், பரிசுத்த பாப்பரசரின் ஆலோசனைகளையும் பெற்றார்.
இந்த திருப்பயணமானது ‘Ad Limina Visit’ என திருச்சபையால் அழைக்கப்படுகிறது.