திட்டமிட்ட தினத்தில் பரீட்சை நடைபெறும்: கல்வி அமைச்சரின் விஷேட அறிவிப்பு

#SriLanka #Susil Premajayantha #Ministry of Education #education #Examination
Mayoorikka
2 years ago
திட்டமிட்ட தினத்தில் பரீட்சை நடைபெறும்: கல்வி அமைச்சரின் விஷேட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

 மேலும், உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

 உயர்தரப் பரீட்சை தாமதமாகாது. பரீட்சை அட்டவணை அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தயாராக உள்ளனர். இரண்டு தரப்பினரும் மட்டுமே நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். 

 உயர்தரப் பரீட்சை மூன்று மாதங்கள் தாமதமானால், மார்ச், ஏப்ரலில் திட்டமிடப்பட்ட சாதாரண தர பரீட்சை மே, ஜூன் மாதங்களுக்கு சென்று விடும். மாணவர்களுக்கு 6 தவணைகள் வழங்க வேண்டி ஏற்படும். பாராளுமன்றத்தில் இதை விளக்கினேன். 

சிலருக்கு புரியவில்லை. இருப்பினும், வழக்கமான அட்டவணையில் பாடத்திட்டத்தை உள்ளடக்குவது அடுத்த ஆண்டு முடிக்கப்படும். எவ்வாறாயினும், பரீட்சை கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி எடுக்கப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!