பாகிஸ்தானில் இருந்து 80 இந்திய மீனவர்கள் விடுதலை
#India
#Arrest
#Fisherman
#Pakistan
#release
#Border
Prasu
1 year ago

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் வெளி நாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.
அந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக கராச்சி மாலிர் சிறையில் இருந்த 80 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டது.
விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அல்லாமா இக்பால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலத்த பாதுகாப்புடன் ஏற்றி வைக்கப்பட்டு உள்ளனர்.
இன்று அவர்கள் லாகூர் சென்றடைகிறார்கள். அங்கிருந்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள்.



