நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் டக்ளஸ் தேவானந்தா நடந்துகொள்ளமாட்டார்!
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கை நாடாளுமன்றமும் இலங்கை மக்களுக்கோ வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கோ பாதிப்பான சட்டங்களை உருவாக்க மாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை மாற்றம் செய்வது கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுவது தொடர்பில் ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பிய போது இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தற்போது சமர்ப்பிக்கப்பட்ட வரைபு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாது. அது தொடர்பாக ஆராயப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டே நிறைவேற்றப்படும்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ நாடாளுமன்றமோ இலங்கை மக்கள் மற்றும் வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கோ பாதிப்பான சட்டங்களை உருவாக்க மாட்டார்கள்.
மேலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நாடாளுமன்றுக்குள் அவதூறு பேசாமல் பொது வெளியில் நாடாளுமன்றுக்கு வெளியே வந்து பேச வேண்டும்” எனவும் சவால் விடுத்துள்ளார்.