இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச தடை விதிப்பதற்கான சதி!

#SriLanka #Parliament #Sajith Premadasa #Srilanka Cricket
PriyaRam
2 years ago
இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச தடை விதிப்பதற்கான சதி!

இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற விவாதத்தின் பின் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் இரகசிய சந்திப்பொன்றை ஹோட்டலில் நடத்தியுள்ளனார் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போதே குறித்த சதி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/2023/11/1699600560.jpg

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தால் இலங்கை கிரிக்கெட் அணி மீதான சர்வதேச தடையை மேற்கொள்ள முயற்சிகள் நடைபெறுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஷாவிடம் கோரிக்கை விடுத்து இந்த தடையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அங்கு பேசப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!