இலங்கை கிரிக்கெட் அணியை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு முயற்சிக்கும் குழு - வெகுவிரைவில் வெளியாகவுள்ள தகவல்!
#SriLanka
#Srilanka Cricket
PriyaRam
2 years ago
இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னால் குழுவொன்று செயற்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்கொண்ட இலங்கை அணி இன்று அதிகாலை நாடு திரும்பிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த குழுவினர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தமது ஆளுகைக்குள் உட்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் அனைத்து தகவல்களையும் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் ஊடகங்களின் மூலம் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.