தீபாவளி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்

#America #War #Hamas #DIwali #Vice_President #wishes
Prasu
1 year ago
தீபாவளி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். 

அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர் ஆவர். விருந்தினர்கள் மத்தியில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், "இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்க்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியை கொண்டாடுவது முக்கியம்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதற்காக, இந்த தீபாவளி அமையட்டும் பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். 

அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்க ஆதரிக்கும்" என கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!