ஹமாஸ் அமைப்பின் 130 சுரங்கங்களை அழித்த இஸ்ரேல் ராணுவம்

#Death #Israel #War #Mine #Military #Hamas
Prasu
1 year ago
ஹமாஸ் அமைப்பின் 130 சுரங்கங்களை அழித்த இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து உள்ளது. 2-வது மாதத்துக்குள் நுழைந்துள்ள போரில் வான், கடல் மற்றும் தரை என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வடக்கு காசாவுக்குள் இஸ்ரேலின் தரைப்படை முன்னேறி சென்றது.

காசா சிட்டியை இஸ்ரேல் ராணுவத்துடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டனர். ஆனாலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து முன்னேறியது. இதற்கிடையே காசா சிட்டியின் மையப்பகுதிக்குள் ராணுவம் நுழைந்ததாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது.

அங்கு ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நீண்ட சுரங்கப்பாதை வலையமைப்பை தகர்க்க தொடங்கி உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இதனால் காசா சிட்டியில் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் சண்டையிட்டு வரும் வீரர்களுடன் இஸ்ரேல் ராணுவத்தின் பொறியாளர்கள் குழுவும் சென்றுள்ளது. 

அக்குழு ஹமாஸ் அமைப்பின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கங்களின் இருப்பிடங்களை கண்டறிந்து அதனை வெடிவைத்து தகர்த்தனர். 

இதில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தரைவழி தாக்குதலில் பூமிக்கு அடியில் ஹமாசின் உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!