சமஸ்டி தீர்வை நேர்மையாக முன்னெடுப்பது தமிழரசு கட்சியே!
சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற கிழக்கின் சிவந்த சுவடுகள் எனும் நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியானது அரசியல் தீர்வு மற்ற விடயம் எங்களுடைய பொறுப்பு கூறல் இந்த இரண்டு விடயங்களில் பிரதானமான விடயங்களாக முன்னெடுத்துக் கொண்டு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது சமகால அரசியலைப் பொறுத்த வரையிலே எத்தனையோ பிரதானமான கட்சிகள் இருந்தாலும் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் குறித்து சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.