எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்! எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
#SriLanka
#prices
#Fuel
Mayoorikka
2 years ago
எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒக்ரேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு, 356 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்ரேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 423 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 356 ரூபாவாகும். சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை 431 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் 07 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 249 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் விலை திருத்தத்திற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு மற்றும் குறைப்பை மேற்கொண்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.