மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள் : தயாசிறி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள் : தயாசிறி!

தற்போதைய அரசு முறையாக செயற்படவில்லை எனவும் அதனால் மக்கள் மறுபடியும் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது என்பதுடன் நானும் நிச்சயம் வீதியில் இறங்குவேன் எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை மீட்பதற்கு தற்போது பொது வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் அதற்கு சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

தற்போதைய அரசு முறையாக செயற்படவில்லை என குற்றம்சாட்டிய தயாசிறி ஜெயசேகர எதிரணிகள் ஒன்றிணைந்து பொதுத்திட்டமொன்றை உருவாக்காவிட்டால் மக்கள் மறுபடியும் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தற்போதைய அரசால் இனியும் முடியாது எனவும், அதனால்தான் பொது வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கு ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
4