பாகிஸ்தான் பொதுத்தேர்தல் திகதி மாற்றம் - குழப்பத்தில் மக்கள்

#Election #Parliament #government #Pakistan #Election Commission #Public
Prasu
1 year ago
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் திகதி மாற்றம் - குழப்பத்தில் மக்கள்

பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி ஆட்சி நடந்தது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு 3 நாட்களுக்கு முன் கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி அடுத்த பொதுத்தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தவேண்டும். ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நிறைவடையாததால் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாகியது.

இதற்கிடையில், தேர்தலை விரைந்து நடத்தக் கோரி பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி காசிபேஸ் இசா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல் சஜீல் ஸ்வாதி ஆஜரானார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதிக்குள் தொகுதி மறுவரையறை பணிகள் முடிவடைந்து விடும். எனவே பிப்ரவரி மாதம் 11-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 

இதனால் தேர்தல் தேதி குழப்பம் முடிவுக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் 3 நாட்களுக்கு முன் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியை பாகிஸ்தான் தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் மற்றும் தேர்தல் குழுவினர் சந்தித்து பொதுதேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனைக்கு பிறகு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!