நிறுத்தப்பட்டது வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் போராட்டம்!
#SriLanka
#NorthernProvince
#Protest
#strike
#doctor
PriyaRam
2 years ago
மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த சாதகமான பதில் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

நேற்றை போராட்டத்தின் தொடர்ச்சியாக வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார அமைப்பின் வீழ்ச்சியைத் தணிக்க, நாட்டில் வைத்தியர்களை தக்கவைக்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்க தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மாகாண மட்டத்தில் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.