கரையே கரையே நெருங்காதே! ஊடகவியாலாளரின் முதல் பாடல் வெளியானது

#SriLanka #Journalist #Music
Mayoorikka
2 years ago
கரையே கரையே நெருங்காதே!  ஊடகவியாலாளரின்  முதல் பாடல் வெளியானது

இலங்கையின் தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவ இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள பரமேஷ்வரன் விக்னேஷ்வரன், இசைத்துறைக்குள் பிரவேசித்துள்ளார்.

 விக்னேஷ்வரன் உருவாக்கிய முதலாவது பாடலின் வரிவடிவ காணொளி (lyric video) யூடியூப் தளத்தில் வெளியாாகியுள்ளது.

 "கரையே கரையே நெருங்காதே..." என்ற பாடலை எழுதி, இசையை அமைத்தது மாத்திரமன்றி பாடலையும் பரமேஷ்வரன் விக்னேஷ்வரனே பாடியுள்ளார்.

 மலையகத்தின் பதுளையில் பிறந்த பரமேஷ்வரன் விக்னேஷ்வரன் (விக்கி) தனது கல்வியை மலையகத்தின் ஏழு பாடசாலைகளில் கற்றுள்ளார்.

images/content-image/2023/11/1698997374.jpg

 தனது தந்தையின் தொழில் நிமிர்த்தம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டமையே, தான் 7ற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் கல்வி பயில்வதற்கு காரணம் என்கிறார் விக்னேஷ்வரன். இசைத்துறைக்குள் பிரவேசிப்பதை தனது கனவாக கொண்ட பரமேஷ்வரன் விக்னேஷ்வரன், ஊடகத்துறைக்குள் பிரவேசித்துள்ளார்.

 இலங்கையின் பிரபல தனியார் ஊடக நிறுவனத்தின் ஊடாக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்த விக்கி, தன்னுடைய 17 வருட சேவையில் நிறுவனத்தின் உயரிய பதவி வரை பயணித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!