புறக்கோட்டை புடவைக்கடை தீ பரவல் - சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு

#SriLanka #Colombo #Death #Accident #Women #Hospital #fire #sri lanka tamil news #Building
Prasu
2 years ago
புறக்கோட்டை புடவைக்கடை தீ பரவல் - சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தீ விபத்தில் படுகாயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, 4குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கொழும்பு – புறக்கோட்டை – 2ஆம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் கடந்த 27ஆம் திகதி பாரிய தீ பரவியிருந்தது. குறித்த விபத்தில் சிக்குண்டு சுமார் 23ற்கும் அதிகமானோர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் 11 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் அப்போது தெரிவித்திருந்த போதிலும், அதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டன.

இவ்வாறான பின்னணியிலேயே, இந்த சம்பவத்தில் காயமடைந்த யுவதி ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி, வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 இந்த தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!