வரவு செலவு திட்டத்தில் 55 வீதம் கடனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது - ரணில்!
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 55% கடன் வட்டி செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நெலும் பொகுண திரையரங்கில் நேற்று (01.11) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இக்கட்டான சூழ்நிலையில் இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடனாளிகளை விடுவித்து நாம் முன்னேற வேண்டும், கடனை செலுத்துவதற்கு ஒத்திவைக்கப்பட்டாலும், திருப்பிச் செலுத்தும் வலிமை உள்ளதா என்று பார்க்கிறோம். கடனை செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை வரவு செலவுத் திட்டத்தில் பெற வேண்டும்.
அடுத்த பட்ஜெட்டில் கடன் வட்டியை செலுத்த ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 55% கடன் வட்டிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பில்லியனை கடன் வட்டியாக செலுத்த வேண்டும்.
ரூபாய் வீழ்ச்சியடைய கூடாது. .பணம் அச்சடிக்க முடியாது. வங்கி கடன் வாங்க முடியாது. இதை இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு செலுத்த வேண்டும். வட் வரியை அதிகரிக்க வேண்டும். 18% வரை அதிகரிக்கப்படும். வாக்கு இருக்கும் போது இதைச் செய்வது கடினமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.