ஹமாஸ் - இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து 31 ஊடகவியலாளர்கள் மரணம்

#Death #Israel #War #Hamas #Gaza #Media #journalists
Prasu
1 year ago
ஹமாஸ் - இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து  31 ஊடகவியலாளர்கள் மரணம்

ஓக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் - இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 31 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது சக ஊடகவியலளார்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஸா பகுதியில் இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையேயான ரத்தப் போர் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்தான் அரசு, ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது.

ஆனால், இன்னும் போர் நிறுத்தம் குறித்த எந்த ஒரு முடிவையும் இஸ்ரேல் எடுக்கவில்லை. செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் முதல் அப்பாவி குழந்தைகள் வரை இந்தக் கொடூரத் தாக்குதலில் பலியாகி வருகின்றனர். 

‘போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமமானது. ஹமாஸுக்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருப்பது அப்பாவி மக்களின் உயிருக்கு விடுத்த சவாலாகவே பார்க்கப்படுகிறது. 

 ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் - இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 31 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என ‘தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல்’ என்ற ஆன்லைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

 இதை பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (The Committee to Protect Journalists) உறுதி செய்துள்ளது. இந்த 31 ஊடகவியலாளர்களில் 26 பலஸ்தீனியர்கள், 4 இஸ்ரேலியர்கள் மற்றும் 1 லெபனான் பத்திரிகையாளர்கள் அடங்குவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!