ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர் அதிகாரி திடீர் இராஜினாமா!

#SriLanka #UN #Human Rights #Human activities
Mayoorikka
2 years ago
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர் அதிகாரி திடீர் இராஜினாமா!

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந் திகதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் காசா பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

 இந் நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் இயக்குநர் கிரேக் மொகிபேர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காசா முற்றுகை விவகாரத்தில் ஐ.நா. சபை மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!