கனடாவில் தடை செய்யப்பட்ட சீன சமூக ஊடக செயலி

#China #Canada #world_news #government #Social Media #Ban
Prasu
1 year ago
கனடாவில் தடை செய்யப்பட்ட சீன சமூக ஊடக செயலி

கனடாவில் அரசாங்கத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரும் சீன செயலியான WeChat சமூக ஊடகத்தினைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் WeChat சமூக ஊடகத்தினைப் பயன்படுத்துவதனை தடை செய்து கனடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையிலே, WeChat சமூக ஊடகம் மூலம் நாட்டின் தகவல்கள் திருடப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

WeChat மூலம் Facebook, Amazon மற்றும் Tinder போன்றவற்றுக்கு ஊடுருவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தியமான பாதுகாப்பு அபாயங்களுக்கு TikTok அதிக கவனத்தைப் பெற்றுள்ள போதிலும், பல பாதுகாப்பு வல்லுநர்கள் WeChat ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக நம்புகின்றனர்.

வட அமெரிக்காவில் உள்ள அரச ஊழியர்கள் TikTok ஐ பயன்படுத்தாதால் இது குறித்து குறைவான கவனம் செலுத்தப்படுகிறது. இதனிடையே, ரஷ்யாவை தளமாகக் கொண்ட Kaspersky எனும் இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் மீதும் கனடா நடவடிக்கை எடுத்து வருகிறது.

 பயனாளர்களின் பயன்பாடுகளை அகற்றி எதிர்காலத்தில் அதனை பதிவிறக்கம் செய்வதனை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!