நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு யாழ்.வைத்தியசாலைகளின் ஊழியர்களும் ஆதரவு!

#SriLanka #Jaffna #Protest
PriyaRam
2 years ago
நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு யாழ்.வைத்தியசாலைகளின் ஊழியர்களும் ஆதரவு!

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ்பாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்களும் இணைந்துள்ளனர்.

இதற்கமைய வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் கொடிகாமம் வரணி வைத்தியசாலையின் ஊழியர்களும் இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

images/content-image/2023/10/1698827091.jpg

சம்பள கொடுப்பனவை அதிகரித்தல், சுகாதார ஊழியர்களுக்கு ஐந்துநாள் வேலைத்திட்டத்தை வழங்கல், ஓய்வூதிய சம்பளத்தை உறுதிப்படுத்தல், மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை மேற்கொண்டனர்.

சுகாதார சேவை தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் இத் தொழிற்சங்க நடவடிக்கையை சுகாதார ஊழியர்கள் நாடுபூராகவும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!