இந்திய மத்திய நிதி அமைச்சரிடம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் முறைப்பாடாளிக்கத் தீர்மானம்!
#India
#SriLanka
#Fisherman
#pressmeet
PriyaRam
2 years ago
யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற இந்திய மத்திய நிதி அமைச்சரை சந்தித்து அவருக்கு தாங்கள் எதிர்நோக்கும் அவலங்கள் தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதாக யாழ்ப்பாண கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு நாளை மறுதினம் வருகை தருகின்ற இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இந்திய மீனவர்களினால் தமது வளங்கள் அழிக்கப்படுபவது தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, எதிர்வரும் காலங்களில் தமிழகத்திற்கு சென்று தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக மீனவர்ளுக்கு தங்களுடைய அவலங்களை எடுத்துரைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.